Home » அதிரை செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும்..! மக்கள் கோரிக்கை..!!

அதிரை செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும்..! மக்கள் கோரிக்கை..!!

0 comment

அதிரை செட்டியா குளத்தில் நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் !

தமிழகரசின் சார்பில் சுமார் 50லட்சம் மதிப்பீட்டில் நடுதெருவில் உள்ள செட்டியா குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரப்ப தயாராக இருந்தன.

ஆனால் கடந்த முறை அதிரையில் பெய்த கனமழை காரணமாகவும், ஆற்றுநீர் வரத்து அதிகரித்ததின் காரணமாக செட்டியா குளத்திற்கு செக்கடி குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீரை கழிவு நீர் கால்வாய் வழியாக நிரப்பப்பட்டன.

இதனால் சுத்தம் செய்யப்பட்ட அக்குளத்தில் சுகாதாரமற்ற முறையே நீரேற்றப்பட்டன. இதனால் அக்குளத்து நீரை மக்கள் பயன்படுத்த அச்சப்பட்டனர்.

இதனாலேயே குளம்.அருகே குப்பைகளும் அசுத்தமான சூழல் இன்றளவும் நிலவி வருகிறது.

இந்நிலையில் காவிரி ஆற்று நீர் மேட்டூருக்கு வந்த நிலையில், கடைமடை பகுதியின் விவசாய பணிகளுக்கு நீர்விட அரசு முயற்சிகள் செய்து வருகிறது.

விவசாய தேவைக்கு போக மீதமுள்ள நீர் கடலில் கலக்கும் நிலையை போக்க, கடந்த காலங்களில் நமதூர் முன்னாள் சேர்மன் SH.அஸ்லம் தலைமையிலான தன்னார்வலர்கள் அதிரையில் உள்ள நீர் நிலைகளில் நீர் நிரப்பும் சேவையை செய்தனர்.

அதேபோன்று நிலை இவ்வருடமும் வரும் பட்சத்தில், நடுத்தெரு செட்டியா குளத்தில் நீர் நிரப்ப வழிகள் ஏதுமின்றி பழையபடி கழிவு நீர் கால்வாய் வழியே நீரேற்றம் செய்ய நேரிடும் இதனால் அக்குளம் மீண்டும் மாசுப்படுத்தப்பட்டு அரசின் பணம்.₹50லட்சம் பயனற்று போகும்.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதிராம்பட்டினம் செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப சிமெந் குழாய் அமைத்து குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter