Home » கைவிட்ட பேரூராட்சி ! கையில் எடுத்த கடற்கரைத்தெருவாசிகள் !

கைவிட்ட பேரூராட்சி ! கையில் எடுத்த கடற்கரைத்தெருவாசிகள் !

0 comment

அதிரையில் உள்ள மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மற்றும் அரசின் அங்கன்வாடி நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளன.

கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளுள் சாக்கடை பிரச்சனையும் ஒன்று. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி நிலையம் அருகே செல்லும் இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஏனென்றால் சுத்தம் செய்யப்படாத அந்த கழிவுநீர் கால்வாயால் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்பது பொதுமக்களின் அச்சம்.

இப்பிரச்சனை தொடர்பாக கடற்கரைத்தெரு இளைஞர்களும் முஹால்லவாசிகளும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் , நேரில் சென்று வலியுறுத்தியும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கடற்கரைத்தெரு வாசிகள் , இனியும் பேரூராட்சியை நம்பி பலனில்லை என்று தாங்களே களத்தில் இறங்கி கழிவுநீர் வடிகாலை தூய்மைப்படுத்தினர். அதிரை கடற்கரைத்தெரு வாசிகளின் இச்செயல் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter