அதிரையில் LIC இந்தியாவின் துணை கிளை திறப்பு விழா இன்று[28.06.2018] நடைபெற்றது. அதிரையில் ஏற்கனவே மினி அலுவலகமாக செயல்பட்டு வந்த LIC தரம் உயர்த்தப்பட்டு சேட்டிலைட் அலுவலகமாக அதிரை ECR ரோட்டில் உள்ள சாரா வளாகத்தின் முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய துணைக் கிளையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் LIC யின் முதுநிலை தஞ்சை கோட்ட மேலாளர் A.S. சுந்தர்ராஜ் கலந்துகொண்டு புதிய கிளையை திறந்துவைத்தார். இவ்விழாவில் LIC இந்தியாவின் திட்ட அதிகாரிகள் , கிளை மற்றும் துணைக் கிளையின் மேலாளர்கள் , முகவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.