6
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் , கடலுக்குள் செல்லும் கோரையாற்று பாதை தூர் வாராமல் உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் தங்கள் படகை செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் முத்துப்பேட்டை கோரையாற்று பாதையை தூர்வாரி மீனவர்களுக்கு உதவிட வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.