Home » “மனசாட்சி” பற்றி அதிரை ஜியாவுதீன் அவர்களின் சிறுகதை..!

“மனசாட்சி” பற்றி அதிரை ஜியாவுதீன் அவர்களின் சிறுகதை..!

0 comment

மனசாட்சி !

முன்பெல்லாம் நாங்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவோம். எங்கள் உணவுகளை மனிதர்களின் வீட்டில் இரவில் பழைய சோற்றை தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை எங்களுக்கு உணவாக வீட்டு வாசலில் வைப்பார்கள்.

அது கால்நடையாக வந்து போகும் எங்களுக்கு மிகவும் உதவியாகவும் உணவாகவும் இருந்தது.

காலம் மாறிவிட்டது ! இப்பொழுதெல்லாம் இரவில் மனிதர்கள் சவர்மா , பரோட்டா , நூடுல்ஸ் , பீட்சா என வகை வகையான உணவுகளை உண்டு வருவதால் எங்களுக்கு காலை உணவாக பழைய சாதங்கள் இல்லாமலாகிவிடுகிறது.

சரி இவர்களுடைய உணவு கலாச்சாரங்கள் மாறிவிட்டது என நாங்கள் புரிந்துக்கொண்டு தெருவில் குப்பையை கிளறி உணவை தேடினால் பேம்பர்சில் மனித கழிவுகள் தென்படுகின்றன. எங்கள் உயிர்களை போக்கும் பிளாஸ்டிக் பொருட்களும் , உடைந்த கண்ணாடி துகள்களும்தான் எங்கள் கண்ணில் தென்படுகின்றன.

இவர்கள் செய்யும் பாவத்தினால் வானிலிருந்து வரும் மழைகூட பெய்ய மறுக்கிறது. நாங்கள் எங்கு தேடினாலும் தாகத்திற்கு தண்ணீர் கூட கிடைப்பதில்லை.

முன்பெல்லாம் அரசாங்க நீர் பைப்புகளில் தண்ணீர் வழிந்தோடும். இப்பொழுது அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. பைப்பையும் காணவில்லை. தண்ணீரையும் பார்க்க முடிவில்லை.

மனிதாபினம் குறைந்துவிட்டது. ஆட்சியும் சரியில்லை. வரவர மனசாட்சிகளும் சரியில்லை. தரையில் நடந்துபார்த்த எனக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியவில்லை.

இந்த வாகனத்தில் ஏறிபார்க்கிறேன் எனக்கு தேவையான நீராவது கண்ணுக்கு தென்படுமா என்று. தாகம் தீருமா என்னைப்போன்ற கால்நடைகளுக்கு.

வேதனையுடன் ஐந்தறிவு கொண்ட ஆடு.

முற்றும்

மனிதர்களே ! ஆட்சியாளர்களே ! சிந்தனை செய்வோம். நம்மை போன்ற உயிர் உள்ள இந்த கால்நடைகளுக்கு உதவி புரிவோம். நம் வீட்டின் அருகே நீர் தொட்டி அமைத்து நீர் கொடுத்து தாகம் தீர்ப்போம் இவ்உயிர் ஜீவராசிகளுக்கு. மனசாட்சியோடு நடந்துகொள்வோம் !

ஜியாவுதீன் ,
நாம் தமிழர் கட்சி.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter