ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிக கால்பந்து ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அதிரை செக்கடி மேடு ஆஃபியா பழக்கடை அருகே உள்ள காலி மனையில் ராட்சத திரையில் உலகக்கோப்பை கால்பந்து தொடர்ப்போட்டியை நேரலை செய்கின்றனர்.
இதனை காண அதிரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிற பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கால்பந்து போட்டியை உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.