50
அதிரை அடுத்துள்ள அணைக்காட்டில் கில்பர்ட் மெமோரியல் கபாடி கழகம் நடத்திய நான்காம் ஆண்டு கபாடி போட்டி நேற்று முன்தினம் முதல் நடைப்பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வென்ற பழஞ்சூர் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
முதல் பரிசு : ரூ.10,000 -பழஞ்சூர்
இரண்டாம் பரிசு : ரூ.8,000 – அணைக்காடு
மூன்றாம் பரிசு : ரூ.6,000 – அணைக்காடு
நான்காம் பரிசு – ரூ.4,000 – மணப்பாறை
இதில் சிறப்பாக விளையாடிய அணிகளுக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கில்பர்ட் மெமோரியல் கபாடி கழகத்தினர் செய்திருந்தனர்.