Tuesday, April 16, 2024

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தினால் , போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில் , ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் தமிழக அரசு அறிவித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் , இதுகுறித்து வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு , அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் முழு விசாரணை நிறைவடைந்து , இறுதித் தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...