72
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
அதைப்போன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள கரம்பயம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் பேருந்துகள் நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தாமதமாக சென்றன. பிறகு காவல்துறையினர் வந்து மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தகவல் :- செய்தியாளர் அலேக்ஸ்