44
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்திய எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வந்தது. நோன்பு பெருநாள் அன்று தொடங்கிய இத்தொடரில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் இன்று(07.07.2018) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் நேதாஜி 7’S தஞ்சாவூர் அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய நேதாஜி 7’S தஞ்சாவூர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அதிரை SSMG அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற நேதாஜி தஞ்சை அணிக்கு ரூ.35,000 மும் , இரண்டாம் இடம் பிடித்த அதிரை SSMG அணிக்கு ரூ.25,000 மும் வழங்கப்பட்டது.