அதிரையில் சமீப காலமாக போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது பெருகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்ட காலம் போய் , பொதுமக்கள் மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து வாங்கி உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஊர் முழுவதும் பரவியது. அதிரையை சேர்ந்த சிறுவர் உட்பட பலர் டெங்குவால் பலியாகினர்.
அதனைத் தொடர்ந்து அதிரையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட அதிரடி ரெய்டில் போலி மருத்துவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். மேலும் சில போலி மருத்துவர்களும் , மருந்தகங்களும் ரெய்டுக்கு அஞ்சி ஊரை காலி செய்த சம்பவங்களும் அரங்கேறியது.
அதிரையில் சில மருந்தகங்களில் நோயாளிகளுக்கு சட்டவிரோதமாக ஊசிகள் போடப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றனர் மற்றும் அதிரையை சுற்றியுள்ள கிராமங்களிலும் நாட்டு வைத்தியம் என்னும் பெயரில் மருந்துகளும்,ஊசிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி மருந்தகங்கள் மருத்துவரின் சீட் இல்லாமல் பொதுமக்களுக்கு ஊசிகள் வழங்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரையிலும் , சுற்றுவட்டார கிராமங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.