140
அதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.
இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த வண்ணம் இருக்கிறது.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், சேதமடைந்த மின் கம்பம் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துவிடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
சேதமடைந்த அந்த மின் கம்பத்தை உடனடியாக அதிரை மின்வாரியம் சரி செய்து அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை அதிரை மின்வாரியம் ஏற்குமா அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல அவமதிக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.