Home » அதிரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!

அதிரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2018-19 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவானது இன்று (08/07/2018) ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் அதிராம்பட்டினம் பவித்ரா திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் மேஜர் டோனர் C.குணசேகரன் தலைமைவிருந்தனராக கலந்துகொண்டார்.

இவ்விழாவில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.மேலும் சென்ற கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைப்போன்று அதிரையில் சிறப்பான முறையில் பொதுசேவையில் தன்னை ஈடுபடுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவர்களை ஆர்வப்படுத்தும் விதமாக ரோட்டரி சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதே போல் கடந்த ஆண்டு ரோட்டரி சங்கம் செய்த சேவைகளை புரெஜ்க்டர் முலம் மக்களுக்கு எடுத்துரைத்து விளக்கப்படுத்தினர்.

2018-19 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்று கொண்டனர்.

தலைவராக M.K. முஹம்மது சம்சுதீன் , செயலாளராக Z. அஹமது மன்சூர் மற்றும் பொருளாளர் S. சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் என திரளாக கலந்துகொண்டனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter