60
கோவை கொடிசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (08.07.2018) நடைபெற்றது.
இதில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், இந்த ஆட்சிக்கு முட்டை ரூபத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்காகத்தான் திட்டம் இருக்க வேண்டும் என்ற அவர், திட்டத்திற்காக மக்கள் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.
மேலும் மக்கள் எதிர்க்கும் திட்டம் எதுவாக இருந்தாலும் அதனை அரசு செயல்படுத்தக் கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.