அதிராம்பட்டிணம் சேது ரோடு முன்பு இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான PVS ரைஸ் மில் தற்போது PVS திருமண மண்டபமாக இயங்கி வருகிறது.
இது அரசின் அங்கீகாரம் ஏதுமின்றி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்.
பேரூராட்சியினால் மக்களுக்கு விநியோகம் தண்ணீர்ரை சட்ட விரோதமாக ராட்சத மோட்டார் பயன்படுத்தி உறிஞ்சி வருகிறது இதனால் அதனை கடந்து செல்லும் வீடுகளுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதி படுகின்றனர்.
இந்த மண்டபத்தில் மேற்குப்பகுதியில் சுமார் 14500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் 5 அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தினமும் 5 மோட்டார்கள் பெருத்தப்பட்டு தண்ணீர் உறிஞ்சிப்படுகிறது என ஆதாரத்துடன் கூறுகின்றனர்.
இதேபோல் மண்டபத்தின் வெளிப்பகுதியில்் சுமார் 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அருகில்.உள்ள மண்டப முதலாளி வீட்டில் சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும் தண்ணீர் கொள்கலன்கள்,10 பேரல்கள் வைத்து இதில் தினமும் தண்ணீரை உறிஞ்சி உபயோகப்படுத்துவதால் இதனை தாண்டி செல்லும் மற்ற வீடுகளுக்கு குடிநீர் செல்வது மிகவும் தடைப்படுகிறது.
இதற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு பேரூர் நிர்வாகம்.போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் !
பேட்டி வீடியோ இணைப்பு:-