Home » அம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு!!

அம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு!!

0 comment

தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக போற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமென்றால் ஒரு அலாதியான விருப்பம்.

இதன் காரணமாகவே அரசு பேருந்து முதல் அலுவலக வர்ணம் வரை பச்சை பசேல் என காணப்பட்டது !

அம்மாவின் மறைவிற்கு பின்னர் அம்மாவின் அரசு என பிதற்றும் EPS-OPS கூட்டணி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறது.

அதன் வெளிப்பாடாகத்தான் அம்மா வெறுத்த அனைத்து திட்டங்களுக்கும் தமிழகத்தில் பச்சைகொடி காட்டப்பட்டு விட்டது.

இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் அம்மாவின் விருப்பத்திற்கு மாற்றாக உள்ளன என்று புழுங்குகின்றனர் அதிமுகவினர்.

இது ஒருபுறம் இருக்க கல்வியை காவிமயமாக்கும் நோக்கில் செல்கிறதா தமிழக அரசு? என்ற கேள்வியை மனது எழுப்புகிறது.

அதன் வெளிப்பாடோ என்னவோ பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியின் பெயர்பலகை முழுமையாக காவி நிறத்தில் மாற்றப்பட்டு விட்டன.

அதேபோல் அருகில் உள்ள சிக்னல் கம்பமும் காவியாகி விட்டதை அடுத்து தமிழகத்தில் கொள்ளை புறத்தில் காவியின் ஆட்சி நடைபெறுகிறதா என என்ன தோன்றுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter