திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பயணம்.
அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இருவரும் லண்டனில் ஒருவாரம் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் அவர்கள் சென்னை திரும்பும் திட்டத்தில் உள்ளனர். ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.