Home » சிறுநீர் தான் சரியானவை எச். ராஜாவின் “சிறு” விளக்கம்!

சிறுநீர் தான் சரியானவை எச். ராஜாவின் “சிறு” விளக்கம்!

0 comment

நுண் பாசனம் அதாவது சிறிய அளவிலான சொட்டு நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு (Micro Irrigation) மத்திய அரசு ரூ. 332 கோடி நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியிருப்பதாக நேற்று சென்னையில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.

அவர் பேசியதை தமிழில் மொழிபெயர்த்த எச். ராஜா, சிறு நீர்ப் பாசனத்துக்கு ₹332 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

ராஜா என்ன பேசினாலும் ஏன் இப்படி ஜெர்க் ஆகுது என்று டிவிட்டரில் ஓட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் பேசியது சரியே என்பதை விளக்கும் வகையில் ஒரு டிவீட் போட்டுள்ளார் எச். ராஜா.

அதில் வித்தவுட் கமெண்ட் என்று போட்டு மைக்ரோ என்பதற்கான அர்த்தம் என்று கூறி ஒரு ஸ்கிரீன்ஷாட்டைப் போட்டுள்ளார்.

அதில் சிறிய, நுண்ணிய, நுண் என்று பொருள் போடப்பட்டுள்ளது.

நாமும் Micro அல்லது Minor ஆகியவற்றுக்குப் பொருள் தேடிப் பார்த்தோம். எங்குமே சிறுநீர் என்று வரவில்லை. மாறாக நுண், சிறிய என்றுதான் வருகிறது.

எந்த இடத்திலும் சிறுநீர் என்று இல்லை.

ஆக, சிறிய என்று ராஜா கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மாறாக சிறுநீர் என்று கூறியதுதான் தப்பாகப் போய் விட்டது.

அட வாய் தவறி வந்துருச்சுப்பா என்று ராஜா டிவீட் போடுவார் என்று பார்த்தால் நான் பேசியதுதான் சரி என்பது போல அவர் போட்டுள்ள டிவீட்டிலும் மக்கள் புகுந்து விளையாடிக் கொண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter