Home » கும்பகோணத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் !

கும்பகோணத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் !

0 comment

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு செல்லும் சாலையில் புதிய மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது.

இங்கு ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் உள்ளனர்.

இந்த நிலையில் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் மீன்வளத்துறை பல்கலைக்கழக பேராசியர் செந்தில்குமார் , ஆய்வாளர் துரைராஜ் , உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மகேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் , நகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது ஒரு சில கடைகளில் 100 கிலோ மதிக்கதக்க ‘பாம்லீன்’ எனப்படும் ரசாயனம் மீன்களில் கலந்து விற்பனை செய்ய இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக அந்த மீன்களை தனியாக பிரித்து பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter