Home » சிதம்பரத்தை சிதறடித்த கண்டனூர்!!

சிதம்பரத்தை சிதறடித்த கண்டனூர்!!

by admin
0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 8 தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் அண்ணாமலை யுனிவர்சிட்டி சிதம்பரம் அணியும், கலைவானர் 7s கண்டனூர் அணியும் மோதின.

முன்னதாக அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இன்றைய ஆட்டத்தினை துவக்கி வைத்தனர்.

ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலேயே கண்டனூர் அணி முதல் கோலை எட்டி உதைத்தது.

கண்டனூர் அணியினரே பந்தை தன்வசப்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஆடினர்.

முதல் பகுதி நேர ஆட்டத்திற்கு பின் சிதம்பரம் அணியினர் கண்டனூர் அணிக்கெதிராக பல ரகசிய வியூகங்களை தனது அணி வீரர்களிடம் மேற்கொண்டாலும், அதையெல்லாம் தவிடு பொடியாக்கி சிதம்பர ரகசியத்தை தனது நேர்த்தியான ஆட்டத்தினால் கண்டனூர் அணி தகர்தெறிந்தது.

இறுதியாக கண்டனூர் அணி 5-1என்ற கோல் கணக்கில் சிதம்பரத்தை வீழ்த்தியது.

நாளைய தினம் கன்னியாகுமரி – தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter