Home » எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !

எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !

0 comment

பட்டுக்கோட்டை – திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும் , சென்னைக்கு விரைவில் நேரடி ரயில் சேவையை துவங்க வேண்டியும் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 14.07.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்குப் பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் துவங்கி மாலை 5.30 மணிக்கு திருவாரூர் ரயில் சந்திப்பில் நிறைவு பெற்றது. மக்கள் சந்திப்பு பயணத்தினை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் தலைமையேற்று துவங்கி வைத்தார். துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். செயலாளர் வ. விவேகானந்தம் வரவேற்புரையாற்றினார். பயணத்தில் எஸ். ஸ்ரீதர் , எம். கலியபெருமாள் , எம். ஹெச். நஜ்முதீன் , டி.இராசேந்திரன் , வி.இராசேந்திரன் , ஆர். பாலசுப்பிரமணியன் , ஏ. இராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டையில் தொடங்கி அதிராம்பட்டினம் , தம்பிக்கோட்டை , முத்துப்பேட்டை , தில்லைவிளாகம் , பாண்டி , திருத்துறைப்பூண்டி , ஆலத்தம்பாடி , திருநெல்லிக்காவல் வழியாக திருவாருரை அடைந்தது. வழி நெடுகிலும் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகளை பார்த்து சென்றனர் . அதிராம்பட்டினத்தில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள், முத்துப்பேட்டையில் வர்த்தக சங்கத்தினர் , ஜாம்பவானோடை தர்ஹா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கர் அலி மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter