Home » தங்க மங்கையான விவசாயி மகள் ஹிமா தாஸ் !

தங்க மங்கையான விவசாயி மகள் ஹிமா தாஸ் !

0 comment

அஸ்ஸாம் நெல் வயல்களில் இருந்து உருவான உலக தடகள சாம்பியன் என்ற சிறப்பை விவசாயி மகளான 400 மீ ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் ஜனவரி 9 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஹிமாவின் குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது.

இந்நிலையில் பின்லாந்தின் டாம்பியர் நகரில் உலக தடகள சாம்பியன் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹிமா தாஸும் கலந்து கொண்டார். இத்தொடரில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 51.46 நொடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார் 18 வயதே ஆன ஹிமா தாஸ். இவர் தங்கம் வென்றதன் மூலமாக 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ள ஹிமா தாஸை லட்சக்கணக்கான மக்கள் பாராட்டி வருகிறார்கள். அவரின் இந்த சாதனையை பொதுமக்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter