Home » முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

0 comment

அதிரையை அடுத்துள்ளது ஏரிப்புரக்கரை ஊராட்சி. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருப்பதாகவும் , அந்த நீர்தேக்க தொட்டியானது முறையான பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் இருந்தும் , பொதுமக்களின் தேவைக்காக திறந்து விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 15 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் , இனி வரும் காலங்களில் முறையான குடிநீர் வினியோகம் இல்லையென்றால் , கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter