Home » துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் !

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் !

0 comment

திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியில் நடைபெற்றது.

இதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை திருச்சி மாநகர துணைஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (44) 10 meter air pistol பிரிவில் கலந்துகொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைஃபிள் கிளப்பில் நடைபெறவிருக்கிறது. அப்போட்டியிலும் கலந்துகொள்ள உள்ளார். அதற்கான selection trail ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமியில் கடந்த 7-8 தேதிகளில் நடைபெற்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter