Home » அதிரை : பயன்பாட்டிற்கு வருமா மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் ?

அதிரை : பயன்பாட்டிற்கு வருமா மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் ?

0 comment

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

பயணிகளின் அடிப்படை வசதியான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரும் பொருப்பும் , கடமையும் பேரூர் மன்றத்திற்கு உள்ளது.

ஆனால் அல் அமீன் பள்ளியருகே கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றம் செய்து விட்டார்கள்.

அதனருகே மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் படியான கழிப்பறை ஒன்று பேரூராட்சி நிர்வாகத்தால் 2011 – 2012 நிதியாண்டில் கட்டப்பட்டது.

சுமார் இரண்டரை லட்சம் செலவில் பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து இந்த கழிப்பிடம் கட்டப்பட்டது.

ஆனால் இந்த கழிப்பறையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு விடவில்லை.

இதற்கு அருகில் இருக்கும் கட்டண கழிப்பறையின் ஒப்பந்ததாரர் ஒருவர் தடையாக உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

மக்களின் வரிப்பணத்தால் கட்டியெழுப்பிய இக்கழிவறையை காலதாமதமின்றி உடனடியாக புனரமைப்பு செய்து திறந்து விடவேண்டும்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் பலனளிக்காமல் உள்ளதாகவும் , இப்பிரச்சனையை துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter