140
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வாய்பேச முடியாத,காது கேளாத சிறுமியை 7 மாதத்தில் 15 பேர் பாலியல் பலாத்காரம்.
அயனாவரத்தில் வசிக்கும் டெல்லியை சார்ந்த தொழிலதிபரின் இரண்டாவது மகள் காது கேளாத,வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி.
அந்த சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள்,காவலாளிகள் என 15க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அம்பலமானது.
புகாரின் அடிப்படையில் லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உட்பட 15 பேரை அயனாவரம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.