Thursday, March 28, 2024

கலங்க வைக்கும் குழந்தை கடத்தல் !(விழிப்புணர்வு பதிவு)

Share post:

Date:

- Advertisement -

குழந்தைக் கடத்தல்… எங்கோ , யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘தஞ்சையில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது , தஞ்சையளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் !

எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படலாம் !

குழந்தைகள் கடத்தல் இன்றைய சூழலில் மிக முக்கியமான பிரச்னையாக , பரவலான குற்றமாக மாறிவிட்டது என்பது சுடும் நிஜம். பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் குடும்பத்துப் பிள்ளைகளும் , அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளும்தான் அதிகமாகக் கடத்தப்படுகிறார்கள். தவிர , நடுத்தர வர்க்கத்தில் இருந்து தொழிலதிபர் வீட்டுக் குழந்தைகள் வரை யாரும் கடத்தப்படலாம் என்பதும் நிதர்சனம்.

எப்படிக் கடத்தப்படுகிறார்கள் ?

பிளாட்ஃபாரக் குழந்தைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் , பெற்றோர் அயர்ந்து தூங்கும்போது லாகவ மாகக் கடத்தப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதில் அங்கு பணியாற்றும் செவிலியர்களில் இருந்து கடைநிலை ஊழியர்கள்வரை பலர் உடந்தையாக இருக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத்தினர் , தொழிலதிபர்கள் வீட்டுக் குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டுவிட்டால்… அந்தக் கும்பல் அக்குழந்தையின் நடமாட்டங்களை பல மாதங்களாகக் கண்காணிக்கிறது. அது எப்போது பள்ளிக்குச் செல்கிறது , திரும்புகிறது , அழைத்துச் செல்பவர் யார் , குழந்தை எப்போது தனியாக இருக்கும் , விடுமுறை நாட்களில் எங்கு விளையாடச் செல்லும் என்று தெரிந்துகொண்டு ஒருவரை இயல்பாக அந்தக் குழந்தையுடன் பழகவிட்டு , தகுந்த நேரத்தில் கடத்திவிடுகிறார்கள்.

ஒரு குழந்தை கடத்தப்பட்ட செய்தி வருகிறதே தவிர , அது மீட்கப்பட்டதா என்ற தகவல்கள் பெரும்பாலும் வருவதில்லை. கடத்தப்படும் 100 குழந்தைகளில், 10 – 20 குழந்தைகள்தான் நல்ல நிலையிலோ , சேதாரங்களுடனோ மீட்கப் படுகின்றனர். மற்ற குழந்தைகளின் நிலை அறியப்படாதது. கடத்தல் காரர்களை அடையாளம் கண்டு விடுவதால், கடத்தப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டுவிடுகின்றனர்.

எதற்காகக் கடத்துகிறார்கள் குழந்தைகளை ?

சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்தெடுத்தல் , பிச்சை எடுத்தல் , குழந்தை தொழிலாளர்கள் , பாலியல் குற்றங்கள் , உடலுறுப்பு திருட்டு , நரபலி என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளை , தங்கள் பிள்ளைகள் போல மடியில் கட்டிக்கொண்டு பிச்சை எடுக்கிறது ஒரு கும்பல். ஏராளமான சிக்னல்களில் இந்தக் கும்பல் பெருகிக்கொண்டே வருகிறது. கடத்தப்பட்ட அக்குழந்தையைச் சுமந்தபடி கையேந்தி , பொதுமக்களின் பரிதாபத்தை தூண்டி , பிச்சையெடுப்பது இந்த கும்பலின் தொழில். இவர்கள் வாரத்திற்கு ஒரு இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு தொடர்ச்சியான நெட்வொர்க்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கடத்தி நரபலி போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மற்ற கடத்தல்களைக் காட்டிலும் , இதற்காக கடத்தப்படுவது குறைவுதான்.

10 – 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்திய கடத்தல்கள் பெரும்பாலும், பாலியல் தொழிலுக்காகத் தான். வயது வரம்பின்றி உடலுறுப்பு திருட்டுக்காகவும் பெருமளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

தொழில் அதிபர்களின் குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் கும்பலும் உண்டு. சென்னை `ஈசிஆர்’, `ஓஎம்ஆர்’ மற்றும் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஏராளமான ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவும் , குழந்தைகளைக் கடத்தி காரியத்தை சாதிக்கும் கும்பல்கள் ஏராளமாகச் செயல்படுகின்றன.

குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெற்றோராகிய நாம் தான் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் , யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு கடத்தல் தொடர்பான முறையான விழிப்புணர்வையும் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.

ஒரு நாளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் அரசு மருத்துவமனை களில்தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. மற்றும் ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில், கடத்தல் கும்பல் குழுவாக செயல்பட்டு பிள்ளைகளைக் கடத்துகிறார்கள். தற்போது கோடை வாசஸ்தலங்கள்தான் அவர்களின் டார்கெட் இடங்கள். இந்தச் சமயத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களும் தங்களின் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் வெறிப்பிடித்த நாய் போல கடத்தல் கும்பல்கள் நம் குழந்தைகளை கடத்துவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...