101
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அறுமாதமாக புதுத்தெரு தென்புறம், திலகர் தெரு, சாயக்கார தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ் ரோடு ஆகிய இடங்களில் சுத்தமான குடிநீர் வரவில்லை, குடிநீர் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது. இத்தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை, துர்நாற்றம் வீசுகிறது என்றும், இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்களும் அதிரை பேரூராட்சிக்கு நேரில் சென்று சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.