31
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இதன் ஏர்-பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி பங்கேற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வமாக பங்கேற்கும் இவர், தொடர்ச்சியாக புள்ளி பட்டியலில் நல்ல நிலையில் உள்ளார். இதனால் தற்போதைய போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிகளுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.