Home » காங்கிரஸ் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் நியமனம் !

காங்கிரஸ் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் நியமனம் !

0 comment

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் டாக்டர்.திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரையின் பேரில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில தலைவர் பவன்குமார் நியமித்துள்ளார்.

நேற்று சென்னையில் இதற்கான நியமன கடிதத்தை பவன்குமார் ஷேக்பரீத்திடம் வழங்கினார்.

ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் ஷேக்பரீத்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவரது வளர்ச்சியை விரும்பாத சிலரால் துவரங்குறிச்சி முக்கூட்டு சாலையில் இருபது பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விவசாயம் சார்ந்த நமது மண்ணிலிருந்து அதுவும் நமது அண்டை ஊரான முத்துப்பேட்டையிலிருந்து நமது சமூகத்தை சார்ந்த ஒருவர் ஒரு தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளராக உயர் பதவிக்கு வந்ததை அதிரை எக்ஸ்பிரஸ் வரவேற்கிறது.

முத்துப்பேட்டை ஷேக்பரீத் அவர்களின் சமூக பணிகள் சிறக்க அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் மனமார வாழ்த்துகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter