22
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரக்கோரியும் , மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் அவருக்கு சால்வை அணிவித்தனர். இச்சந்திப்பின் போது பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசும் உடனிருந்தார். இந்த நிகழ்வில் மீனவ சங்க பிரதிநிதிகள் சுந்தர்ராஜ் , தாஜிதீன், ராஜமாணிக்கம் , வடுகநாதன் , செல்வக்கிலி மற்றும் செந்திலதிபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.