16
உலகின் மிகவும் வயதான பெண் என்ற பெருமையை பெற்ற சியோ, வயது 117,உடல் நலக்குறைவால் ஜப்பானில் நேற்று காலமானார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் தலைநகர் டோக்கியோவின் தென் பகுதியில் உள்ள கனகாவா பகுதியைச் சேர்ந்தவர் சியோ மியாகோ, உலகின் மிகவும் வயதான பெண் என்பதற்காக, ‘கின்னஸ்‘ சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. சமீப காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சியோ, நேற்று காலமானார்.இதையடுத்து, ஜப்பானின் புகுவோகாவைச் சேர்ந்த, கானே தனாகா, வயது 115, என்ற பெண் தற்போது உலகின் மிக வயதான பெண் என்ற பெருமையை பெறுகிறார்.