Home » எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் இல்யாஸை தாக்கிய மனுசம்மந்தமாக மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு….!

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் இல்யாஸை தாக்கிய மனுசம்மந்தமாக மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு….!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட தலைவரை தாக்கிய 3 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ₹ 25000 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவு.

கடந்த 2013ல் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு செல்லும் போது, அதிரை காவல் அதிகாரிகள் அவதூறாக பேசினர்.இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.இதன் காரணமாக என் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் 1.04.2013 அன்று புதுப்பட்டிணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அந்த வழியாக செல்லும் போது வாகனத்தை இடைமறித்து அதிராம்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ் மோகன், கமல், ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் என்னை அவதூறாக பேசி கடுமையாக தாக்கினர்.என்னுடைய செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். இவ்வாறு மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு செய்திருந்தார்.

இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.ஆகவே சப் இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter