Home » அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..!

அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..!

0 comment

அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..! மொத்தம் 100 கோடி ரூபாய்..!!சிறப்பான சம்பவம்..!!!
Seithi Puna

லெட்சுமி ரெட்டி என்பவர், ஆந்திராவில் உள்ள நெல்லுார் மாவட்டத்தில் உள்ள மின் துறை நிர்வாக உதவி பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் 1993-ஆம் ஆண்டு, காவலி துணை மின் நிலையத்தில், உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1996-ல் உதவி லைன் மேனாகவும், 1997-ல் லைன் மேனாகவும், தொடர்ச்சியாக பதவி உயர்வு பெற்றார்.

இவர் தனது அதிகாரிகளுக்கு செய்ய வேண்டியதைச் செய்து, தனது புரமோசனுக்கு ஏற்பாடு செய்துள்ளார். 2014-ஆம் ஆண்டு முதல், போகோலு மண்டலத்திற்கு உட்பட்ட மங்காமரு கிராமத்தில் லைன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் மீது, தொடர்ந்து லஞ்சப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து மாநில ஊழல் தடுப்பு அதிகாரிகள் நேற்று அதிரடியாக லெட்சுமி ரெட்டி, அவரது தந்தை மற்றும் மருமகன்கள் வீட்டிலும் சோதனை தொடர்ந்தது.

மாலை வரை சோதனையிட்ட அதிகாரிகள் அசந்து போய் விட்டனர். இவர் லஞ்சம் வாங்கிய பணத்தில், 57 ஏக்கர் விவசாய நிலம், 6 சொகுசு வீடுகள், வங்கியில் பத்து லட்சம் பணம், மற்றும் வீட்டு மனைகள் உள்ளிட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு 100 கோடியைத் தாண்டி நிற்கிறது.

மேலும், லெட்சுமி ரெட்டி, மின் வாரிய குடோனில் இருந்து, காப்பர் ஒயர் உள்ளிட்ட பொருட்களை, மோசடியாக விற்று, அதிலும கோடி கோடியாக பணத்தைச் சுருட்டி உள்ளார்.

அனைத்து சொத்துக்களும், லெட்சுமி ரெட்டியின் மனைவி பெயரில் வாங்கப் பட்டுள்ளது. அதிகாரிகள், லெட்சுமி ரெட்டியின் சொத்துக்கள் அனைத்திற்குமான ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

லெட்சு ரெட்டியையும் கைது செய்துள்ளனர்.

Source:- Seithi_puna | தமிழன் எக்ஸ்பிரஸ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter