Home » சர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்!!

சர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்!!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வி.லோகப்பிரியா காதிர் முஹைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் 360Kg எடைப்பிரிவில் லோகப்பிரியா தங்க பதக்கம் வென்றார்.

இதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்காவின் பாட்செஃப்ஸ்ட்ரூம் ல் செப்டம்பர் 2 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறவிருக்கிற 18வது உலக சப்-ஜுனியர் மற்றும் 36 வது ஜுனியர் பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் இந்திய சப்-ஜுனியர் மற்றும் ஜுனியர் குழுவிற்கு தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து இன்று அவரிடம் நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ குழு நேர்காணல் நடத்தியது.

மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதனால் தென்னாப்பிரிக்கா சென்று போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு பொருளாதாரம் இல்லை எனவும் வருத்ததுடன் நம்மிடம் கூறினார்.

இருப்பினும் மனதில் உறுதியும், நம்பிக்கையும் விதைத்திருக்கிறேன் விரைவில் அந்த நம்பிக்கையுடன் கலந்து கொண்டு நம் நாட்டிற்கு ஒரு தமிழச்சியாக பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

மாணவி லோகப்பிரியா இந்த நம்பிக்கையுடன் சர்வதேச அளவில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்கும் வண்ணம் சாதனை படைக்க ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ குழு மனதார வாழ்த்துகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter