Home » உயிரற்று கிடக்கும் ஏறிபுரக்கரை ஊராட்சி, உயிர்த்தெழுவது எப்போது??

உயிரற்று கிடக்கும் ஏறிபுரக்கரை ஊராட்சி, உயிர்த்தெழுவது எப்போது??

0 comment

அதிரையில் அதிகாரிகளால் எப்போதுமே ஒதுக்கப்படும் தெருக்களில் பிலால் நகரும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பிலால் நகரில் கழிவு நீர் சாலைகளில் தேங்கியும், குப்பை கூளங்கள் வெகு நாட்களக அள்ளப்படாமல் வீதிகளில் சிதறி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இது ஒருபுறமிருக்கு, ஏறிபுரக்கரையில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதாவது கார்ப்பரேசன் தண்ணீர் தொட்டிகளில் முழுவதுமாக நிரப்பபட்டாலும் அதனை அப்பகுதி மக்களுக்கு முறையாக வழங்காமல் மக்களை வதைத்து வருகிறது ஊராட்சி நிர்வாகம்.

ஒவ்வொரு முறையும் தவறாமல் தண்ணீர் வரிக்காக வீடு தேடி வரும் அதிகாரிகள் முறையாக பொதுமக்களுக்கு குடி தண்ணீரை விநியோகம் செய்யாமல் இருந்து வருவதன் பின்னணி என்னவென்று புரியவில்லை.

இதனை ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியும் அம் மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்காமல் மெத்தனப்போக்காகவே இருந்து வருகிறது.

இந்த மெத்தனப்போக்கு ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்தால், பொதுமக்களை திரட்டி மிகப்பெரும் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம் நடத்தும் முன் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகம்?

பொறுத்திருந்து பார்ப்போம்..!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter