45
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஹபீபா ஹைபர் மால் எதிரே உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் உராய்வு ஏற்படும் சூழல் உள்ளது என்றும், இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க மின் கம்பியை உயர்த்த வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியானது.
http://adiraixpress.com/06-07-2018/
இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான அப்பகுயில் மின் வாரிய ஊழியர்கள் உயரழுத்த மின் கம்பிகளை உயர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் அதிரை மின் வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் பாராட்டை தெரிவித்துள்ளது !
வீடியோ இணைப்பு:-