உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வேட்பாளார்கள் யார் யார் என எமது உளவுப்பார்வை குழு முதற்கட்ட தகவலை ஆகாயத்தில் இருந்து வீசி எரிந்துள்ளன.!
அதிராம்பட்டினம் 21 வார்டுகளை கொண்ட பேரூராக உள்ளது .
கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சி வந்த காங்கிரஸ் வகையராவை வீழ்த்தி கட்டிலில் அமர்ந்தார் அஸ்லம்!
காலம் நழுவியது கல(ழ)கம் பிறந்தது கழகத்தில் !
தனித்தனியே செயல்பட்ட விவரம் செயல் தலைவருக்கே தெரிந்த விஷயம் !
அதுக்கென்ன உளவு இப்போ என்ன விவகாரம்? என பள்ளைகடிக்கும் முன் சில யூகங்களை அள்ளி வீசுறேன்.. சரியா தப்பான்னு எனக்கு தெரியாது ஆனா ஆகாயத்துல இருந்து கண்ணில வெளகென்னை ஊத்தி கன்கானிப்பட்டவை இவை.
அதாகப்பட்டது கடந்த முறை திமுக பிடியில் இருந்த பேரூர் மன்றத்தை புதிதாக வந்த சில கட்சிகள் கைப்பற்ற கங்கணம் கட்டி பணியாற்றி வருகிறார்கள். இதில் தீவிரமாக நாம் தமிழரின் செயல்பாட்டு சொல்லதக்க வடிவில் உள்ளன.
திமுகவிலோ 4முனை… ஒன்று குணசேகரன் தரப்பு (2) அஸ்லம் குரூப்பு(3)எவர் கோல்டு டீம்!
இது போக தலைமை தரப்போ 14வார்டு முன்னாள் கவுன்சிலர் NKS சரிபை களமிறக்க திட்டம் என தெரிகிறது.
அதிமுக தரப்பில் அஜீஸை மீண்டும் களமிறக்க தீர்மானமாக தெரிகிறது !
அமமுக அமுக்கமாகவே தெரிந்தாலும் தேர்தல் நேரத்தில் தண்ணீரா செலவு செய்யவும் தயாராக இருப்பர்.!
அதுதவிர 40ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தின் பிம்பமாக இருக்கும் MMS குடும்பமும் இம்முறை களம் காண இருப்பதாக செய்திகளாக இருந்தாலும்.,
தாமக தனித்து போட்டியிட்டால் மட்டுமே மானா மியன்னா சேனா வகையராவின் கனவு பலிக்கும்..!
ஒரு வேலை திமுகவின் கூட்டனியில் இணைந்தால்…??? தெரியலப்பா…. வாடிபக்கம் போகல..
நீண்ட காலமாக அதிரையில் ஆழம் பார்த்துவிட வேண்டும் என கனவாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கும் பட்சத்தில் மாநில துணைத்தலைவர் SSBக்கு வாய்ப்புள்ளது.
சில்லறை கட்சிகள் சில சந்தர்ப்பம் பார்க்க உள்ள நிலையில் , இம்முறை அதிரை உள்ளாட்சி மன்ற தேர்தலில் உள்ளூர் செய்தி ஊடகமொன்று போட்டியிட உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவலால்… தலை சுற்றி இறங்கி விட்டேன்….
இன்னைக்கு இது போதும்ப்பா….
அப்போப்போ வந்து உளவு சொல்லுறேன்…
அய்யோ தல சுத்துதே… எந்த குளத்துலயும் தண்ணீ வேற இல்ல… மொதல்ல குளத்த நெரங்கைப்பா….