இன்று 03.08.2018 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் லத்திபா மருத்துவமனையில் தமுமுக மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமுமுக அமீரக துணை தலைவர் A.S.இப்ரஹீம்,தொழில் அதிபர் இளையான்குடி அபுதாஹீர்,ஆடிடர் இளவரசன்,தொழில் அதிபர் S.S.மீரான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் தமுமுக மண்டல செயலாளர் ஷேக் தாவுது,மமக மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், தமுமுக மண்டல துணை தலைவர் அப்துல் ரஹ்மான்,தமுமுக துணை செயலாளர் லால்பேட்டை அலி, மக்கள் செய்தி தொடர்பாளர் திருச்சி பிலால், ஊடக பிரிவு செயலாளர் முத்துப்பேட்டை பைசல், மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக், துபாய் மண்டல உட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
தகவல்
தமுமுக ஊடக பிரிவு
துபாய் மண்டலம்