Home » அதிரை பெண்களே உஷார்..!

அதிரை பெண்களே உஷார்..!

0 comment

ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல், ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான்.

இவனிடம் உதவி கேட்க்கும் பெண்களிடம் நல்லவன் போல நடித்து. பெண்களின் செல்போனில் திருட்டுத்தனமாக APP ஒன்றை தரவிரக்கம் (Download) செய்துள்ளான். இதன் மூலம் அந்த பெண்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான போட்டடோ, வீடியோ, மெஸ்ஸேஜ்கள் போன்ற தகவல்களை திருட்டு தனமாக தன் கைபேசி, லேப்டாபில் தரவிரக்கம் செய்து அந்த புகைப்படங்களை வைத்து தவறான காரியங்களின் ஈடுபடுத்த வற்புறுத்தி உள்ளான்.

இவனுக்கு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அந்த புகைப்படங்கள்/வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து விடுவேன் என அச்சுறுத்தியுள்ளான்.

இது போல ஒரு பெண்ணை வற்புறுத்தியதும் அந்த பெண் திட்டம் போட்டு. இந்த கொடியவனை சிக்க வைத்தார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது செய்தி இது எங்கேயோ நடக்கிறது என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். நமதூரிலும் நடக்கலாம் விழித்து கொள்ளுங்கள்.

உங்களின் கைபேசியை நீங்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள். இது நாம் பயமுறுத்த சொல்லுவது கிடையாது. இது உங்களின் பாதுகாப்பிற்காக கூறுகிறோம்.

அன்றாட நீங்கள் பயன்படுத்தும் Appகளை தவிர வேறு எந்த App ஐ யும் உங்கள் கைபேசியில் வைக்க வேண்டாம். நீங்கள் download செய்யாத App ஏதேனும் உங்கள் கைபேசியில் இருந்தாலும் அல்லது சந்தேகத்திற்குரிய App ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனே அழித்து விடவும்.

உங்கள் கைபேசியில் Settings –> App (Application) சென்று நீங்கள் பயன்படுத்தாத /சந்தேகத்திற்குள்ளான App ஏதேனும் இருந்தால் அதனை Uninstall செய்து விடுங்கள்.

தேவையற்ற App களை கைபேசியில் வைத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்த கூடும்.

ஆகவே, வெள்ளம் வரும் முன் அனை போடுவது சாலச் சிறந்தது என்பதனை விளங்குங்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter