49
அதிராம்பட்டினம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று செக்கடி பள்ளியருகே மாணவர்களை விட சென்றுள்ளது, அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜ் (57) என்பவர் மீது எதிர்பாராத விதமாக பள்ளியின் வாகனம் மோதியது.
இதில் நெஞ்சில் பலத்த காயமும் அவருடைய பற்களும் உடைந்தது.
பின்னர் தமுமுக அவசர ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு CBD அமைப்பினர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது எனவும் நெஞ்சு எலும்புகள் உடைந்த நிலையில் உள்ளதாகவும் தாடை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு வாயை திறக்க இயலாமல் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.