109
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையின் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கலைஞருக்கு ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலை சீராக இயங்கி வந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கலைஞரின் உடல்நிலையில் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்கு பிறகே கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரியவரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி மருத்துவமனை அருகே திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.