Home » ஆசிரியை அடித்ததில் ரத்தம் சொட்ட சுருண்ட மாணவி : அதிரையில் கொடூரம்!!

ஆசிரியை அடித்ததில் ரத்தம் சொட்ட சுருண்ட மாணவி : அதிரையில் கொடூரம்!!

by admin
1 comment

அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் மாணவி சபீக்கா.

இவர் நேற்று வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதால் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடம் பயிற்றுவிக்கும் அப் பள்ளியின் ஆசிரியை மாணவியை அடித்துள்ளார்.

இதில் அம்மாணவி கையில் அணிந்திருந்த வளையல் உடைந்து கையை கிழித்துக் கொண்டு உள்ளே சென்றதில் ரத்தம் சொட்டியது.இதனால் மாணவி நிலைகுலைந்தார்.

இதனையடுத்து பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ரத்தம் சொட்ட சொட்ட சென்ற மாணவியை பார்த்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பின்னர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த போது, வளையல் கிழித்ததில் மாணவியின் கையில் ஓரிரு வளையல் உள்ளே சிக்கிய நிலையில் அதை வெளியே எடுத்து 5 தையல்கள் போடப்பட்டுள்ளது.

வீட்டுப் பாடம் எழுதவில்லையெனில் பெற்றோரை அணுகி கண்டிப்பது தான் முறையே தவிர மாணவிகளை இப்படி கொடூரமாக அடிப்பதென்பது முற்றிலுமான தவறு.

அன்பான முறையில் மாணாக்கர்களுக்கு பாடம் பயிற்றுவிக்க தெரியாத ஆசிரியர்கள் பள்ளிகளில் நீடித்தால், மேலும் இது போன்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter