91
நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், காகிதத்தாலான தேசியக்கொடிகளை மட்டுமே கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டும், என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நம் நாட்டின் கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும் எனக் கூறியுள்ளது.
இதனையடுத்து காகிதத்திலால் ஆன கொடிகளை தயாரிக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளன.