54
1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த உதவித்தொகையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விழிப்புணர்வை சமூக தொண்டு அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும்,எனவும் படிப்பறிவு இல்லா மக்களுக்கு உதவிகள் செய்து இந்த சலுகை கிடைத்திட உதவிட வேண்டும் என ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கோரிக்கையாக வைக்கிறது.
மேலும் தகவலுக்கு www.bcmbcmw.tn.gov.in ல் பார்க்கவும்.