Home » அதிரை தீவிபத்து பகுதியில் திமுக வாழ்வாதார உதவி !

அதிரை தீவிபத்து பகுதியில் திமுக வாழ்வாதார உதவி !

0 comment

அதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி மக்கள் தீயை போராடி அணைத்தனர்,பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுக்காப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் இன்று அதிகாலை சுமார் 7 மணியளவில் நகர திமுக செயலாளர் இராம குணசேகரன், இலக்கிய அணி பழஞ்சூர் செல்வம், MMS அப்துல்.கரீம், முன்னாள் கவுன்சிலர் அமைப்பாளர் அன்சர்கான், மறைக்கா இதீரீஸ் இதிரீஸ், உள்ளிட்ட திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கண்னீர் மல்க பொருட்களை பெற்று கொண்ட பாதிக்கப்பட்ட மக்களஉின் நிரந்தர வாழ்வாதார மேம்பாட்டை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் எனவும், அதிராம்பட்டினம் நகரம்.பல்கி பெருகி வரும் நகரமாக உள்ளதால் இங்கு அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் பொருள் விரயம் ஏற்படுகிறது.

இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அதிராம்பட்டினத்தில் நிரந்தமாக ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இராம.குணசேகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter