Home » அதிரை லயன்ஸ் சங்கத்தின் மாதாந்திரம் ஆலோசனை கூட்டம்..!!

அதிரை லயன்ஸ் சங்கத்தின் மாதாந்திரம் ஆலோசனை கூட்டம்..!!

by
0 comment

அதிரை லயன்ஸ் கிளப் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் (12.08.2018) இரவு 7 மணியளவில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சி பேரா. ஹாஜி M.A. முகம்மது அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
செயலாளர் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் இம்மாதத்திற்கான அறிக்கையை வாசித்தார்.

பேரா.Dr.S.P. கணபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

லயன்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கான (உறுப்பினர்களின் பயன்கள் பற்றி)
பேரா. K.செய்யது அகமது கபீர் அவர்கள்
தனது சிம்மக் குரலில் சிறப்புரையாற்றினார்

முன்னதாக லயன்ஸ் கிளப் தலைவர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தும்போது முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை பற்றிய நினைவுகளை எடுத்துரைத்து அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

புதிய உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வருட இலட்சினை வழங்கப்பட்டது

லயன்ஸ் கிளப் சங்கத்தின் சாசன உறுப்பினர் லயன் அப்துல்லா அவர்களுக்கு 20 வருடம் பூர்த்தியானதையொட்டி
அவருக்கு பன்னாட்டு சான்றும் பன்னாட்டு இலட்சினையும் வழங்கப்பட்டது.

பேரா. செய்யது அகமது கபீர் அவர்களுக்கு (club guide line) என்னும் பன்னாட்டு சான்று பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தப்பட்டது.

இதில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு உறுப்பினர்கள் பெருமளவில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாதாந்திர கூட்டத்தை சிறப்பித்தார்கள்.

பிறகு, லயன் ஹாஜி.அப்துல் ஜலீல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக விருந்து உபசரிப்பு,
தலைவர்
செயளர்
பொருளர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter