Home » சுதந்திர தினம் மட்டுமல்ல கிராம சபை கூட்டம் நடக்கும் தினம்….!

சுதந்திர தினம் மட்டுமல்ல கிராம சபை கூட்டம் நடக்கும் தினம்….!

by admin
0 comment

நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், தேசிய கொடியை ஏற்றிவிட்டு கலைந்து செல்வதுடன் முடிவதல்ல நமது ஜனநாயக கடமை.காந்தி அவர்கள் வற்புறுத்திய பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை வலுப்படுத்த அன்றைய தினம் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் கலந்துக்கொள்வதும் நம் கடமை.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கிராமங்களில் அடிப்படை பணிகள்,திட்டங்கள் தொடங்கி பொருளாதரம் வரை நிலைகுலைந்து போயிருக்கிறது.இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.குடியரசு தினம்,உழைப்பாளர் தினம்,சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள்.

நாளை கிராம சபை கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை, சுகாதர திட்டங்கள்,மகாத்மா ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்டவை மாநில அரசே தீர்மானங்களை கொடுத்து உள்ளது.இந்த தீர்மானங்களுடன் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றுவது அவசியம். என்னமாதிரியான திட்டங்கள் தேவை என்பதையும் தீர்மானம் நிறைவேற்றலாம்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படையான நிதி நிர்வாகம்,பஞ்சாயத்து ராஜ் இன்ஸ்டிடியூசன் டிரான்ஸ்பரன்ட் என்கிற மென்பொருள் மூலம் சாத்தியமாகி உள்ளது.

நம்முடைய கிராம பஞ்சாயத்துக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கியுள்ள நிதி மற்றும் வரவு செலவுகள் குறித்து இணையத்தில் (www.accountingonline.com) தெரிந்து கொண்டு புள்ளிவிபரத்துடன் சென்றால் கேள்விகளை எழுப்பலாம்….

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter