62
உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இன்று வரை பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிரை திமுகவினரும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதிரையிலிருந்து பேருந்தில் வந்த 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.