ஏகாதிபத்தியத்திய பிரிட்டீஷ் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, 72 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டு விடுதலைக்காக ஜாதி, மதங்களை கடந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். சுதந்திர போராட்ட தலைவர்கள் கண்ட கனவு இன்னும் எஞ்சியுள்ளது. அதை நிறைவேற்ற சாதி, மதங்களை கடந்து ஒன்றிணைவோம்.
மேலும் ஊழல், லஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, ஏழ்மை, தீண்டாமை, கலவரம் ஆகியன இல்லாத நாடாக மாற்றிடவும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேற்றம் அடையவும், சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அகன்று சகிப்புத் தன்மை அனைவரிடமும் வளர்ந்திடவும், உண்மையான ஜனநாயக மற்றும் மதச் சார்பாற்ற நாடாக நம் நாட்டை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் சபதமேற்போம்.
ஒன்றினைவோம்_சக்திபெறுவோம்